பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் மறைவு

சென்னை: சினிமா பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ், 75, சென் னையில் இன்று (அக்.,22) காலமானார்.

இசையமைப்பாளர் தேவா வாயிலாக, பாடகராக அறிமுகமானவர் கிருஷ்ணராஜ். அதன்பின், பலரது இசையமைப்பில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

‘தஞ்சாவூரு மண் எடுத்து, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ உள்ளிட்ட பல பா டல்களை பாடியுள்ளார். சமீபகாலமாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இவர், சென்னை வளசரவாக்கத்தில் இன்று காலமானார்.

அவரது உடல், இன்று காலை, சொந்த ஊரான சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அடக்கம் செய்யப்பட உள்ளது. கிருஷ்ணராஜ் மறைவுக்கு, முதல்வர் விஜய் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Source link