ஆசிய விளையாட்டு: 4வது நாளில் மட்டும் இந்தியாவுக்கு 26 பதக்கங்கள்

ஆசியா பாரா விளையாட்டு போட்டியில் 4வது நாள் இந்தியாவுக்கு மகிழ்ச்சி தரும் தினமாக அமைந்தது.இன்று மட்டும் 7 தங்கம் உள்ளிட்ட 26 பதக்கங்களை பெற்றது.

வில்வித்தையில் ஷீத்தல் தேவி ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு தங்க பதக்கத்தை வென்றார்.கலப்பு இரட்டையர் பிரிவில் ஷீத்தல் தேவியும், தோமன் குமாரும், இந்தோனேஷியா ஜோடியை தோற்கடித்து தங்கத்தை உறுதி செய்தனர்.தனி நபர் பிரிவிலும், ஷீத்தல் தேவி, சிங்கப்பூரின் அலிம் நுர் சயஹிதாவை தோற்கடித்து மற்றொரு தங்கத்தை பெற்றார்.வட்டு எறிதலில், எப்54 பிரிவில் சுவர்னா ராஜ் தங்கம் வென்றார்.

400 மீட்டர் ஓட்டத்தின் டி47 பைனலில் திலிப் கவித்துக்க தங்கம் வென்றது. இந்தத் தொடரில் அவருக்கு கிடைக்கும் இரண்டாவது தங்கமாகும்.

சோலைராஜா தர்மராஜாவும், டி44/ டி62/டி64 பிரிவில் தங்கம் வென்று சாதித்தார்.

இந்தியா இதுவரை 88 பதக்கங்கள்( 81 தங்கம்,26 வெள்ளி, 41 வெண்கலம்) பெற்று 4வதுஇடத்தில் உள்ளது. முதல்நாளில் 4வது இடத்தில் இருந்த இந்திய அணி 2வது மற்றும் 3வது நாளில் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இன்று மீண்டும் பழைய இடத்திற்கு வந்தது.

இந்தியாவுக்கு கிடைத்த மொத்த பதக்கங்களில் 52 பதக்கங்கள்( 18 தங்கம், 16 வெள்ளி, 18 வெண்கலம்) ஆகியவற்றை தடகள வீரர்கள் பெற்றுக் கொடுத்தனர். அவர்களுக்கு பாராட்டு குவிகிறது.

பதக்க பட்டியலில் சீனா(149 தங்கம்) முதலிடம், ஜப்பான்(40 தங்கம்_) 2வது இடம், உஸ்பெகிஸ்தான்(37 தங்கம்) 3வது இடத்தில் உள்ளன.

Source link