திருப்பரங்குன்றம்: ”நாட்டின் பிரதமராக ராகுல், தமிழக முதல்வராக விஜய்; இதுதான் எங்கள் நிலைப்பாடு,” என, காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் ஊழலற்ற அரசு வேண்டும் என்பதற்காகவே, முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க.,விற்கு மக்கள் ஓட்டளித்தனர்.
பிரதமர் வேட்பாளர் குறித்து தனிநபர் விருப்பமும் கட்சியின் நிலைப்பாடும் வேறு வேறு. நாட்டின் பிரதமராக ராகுல், தமிழக முதல்வராக விஜய்;இதுதான் எங்கள் நிலைப்பாடு.
சட்டசபையில் எங்கள் கட்சி அமைச்சர் விஸ்வநாதன் பேசினாலே, தி.மு.க.,வினர் பேச விடாமல் கூச்சலிடுகின்றனர்; இது நியாயமற்றது. தி.மு.க.,வினரை சபாநாயகர் எச்சரிக்க வேண்டும். தமிழக சட்டசபைக்கு, வருங்காலத்தில் பெண் சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டும்; அதையும் முதல்வர் விஜய் செய்வார்.
பா.ஜ.வின் தமிழக தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் பா.ஜ.,வை முடித்து வைக்கும் தலைவராக மாறிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
