பிரதமர் மோடியின் ஒரேயொரு செல்பி வீடியோ; புதிதாக பின்தொடர்ந்த 10 லட்சம் பேர்

புதுடில்லி: பிரதமர் மோடி செல்பி வீடியோ வெளியிட்டதன் எதிரொலியாக அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஒரே நாளில் 10 லட்சம் பேர் புதியதாக பின்தொடர்ந்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை 10.2 கோடி பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். அவர் நேற்று தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்பி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது ஒரு சாதாரண பிரச்னை அல்ல என்று பேசி இருந்தார்.

பிரதமர் மோடியின் செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. குறிப்பாக ஜென் ஸி தலைமுறையினர் அவரின் வீடியோவை வரவேற்று ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

அதோடு நின்றுவிடாமல், அவரின் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடரவும் செய்துள்ளனர். இப்படி ஒரே நாளில் பிரதமரின் இன்ஸ்டாகிராமை 10 லட்சம் புதியதாக பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் இந்த இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவானது, 27.1 கோடி பார்வைகளையும், 1.5 கோடி பேர் விருப்பங்களையும், 1.3 கோடி பேர் கருத்துகளையும் பெற்று இருக்கிறது.

Source link