பிரதமர் மோடியை அவமதித்து இணையத்தில் பதிவு; பெண் ஏ.எஸ்.ஐ., சஸ்பெண்ட்

நமது நிருபர்

பிரதமர் மோடி, மத்திய அரசை அவமதிக்கும் வகையில் விமர்சித்து ‘பேஸ் புக்’ க்கில் பதிவிட்ட இடுக்கி குற்றப்பிரிவு ஏ.எஸ்.ஐ., சஜிதா ‘சஸ்பெண்ட் ‘ செய்யப்பட்டார்.

இவர், பிரதமர், மத்திய அரசு மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சிகளையும் விமர்சித்து சட்டவிரோதமாக ‘பேஸ் புக்’கில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். அது குறித்து இடுக்கி எஸ்.பி., விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தார். அதன்படி எர்ணாகுளம் குற்றப்பிரிவு ஐ.ஜி., ஷியாம்சுந்தர், சஜிதாவை ‘சஸ்பெண்ட்’ செய்தார்.

அச்சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு எர்ணாகுளம் குற்றப்பிரிவு துணை டி. எஸ். பி. பிரசாத்க்கு உத்தரவிட்டார்.

Source link