‘பிரதமர் விஜய்’ கோஷம்.. வானதி சீனிவாசன் Exclusive!

மாரா நெக்ஸ்ட் அ பி.எம், விஜய் தல்பதிஹே..!’ என்று இன்ஸ்டா ரீல்களில் வட இந்திய இளசுகள் கொண்டாடுகிறார்கள். ராகுலை டம்மியாக்கி கடுப்பேற்றும் த.வெ.க.விடம், கூட்டாளியான காங்கிரஸ் உம்மென்று இருக்க, எதிர்வரிசை பா.ஜ.க.வும் கம்மென்று இருப்பதுதான் ஆச்சர்ய அதிர்ச்சி! இந்த விவகாரத்தில், தாமரை தரப்பின் ரியாக்ஷன் என்னவென்று அறிய, அக்கட்சியின் தேசிய மகளிரணி முன்னாள் தலைவரான வானதி சீனிவாசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

விஜய் ஆட்சிக்கு உங்களுடைய கமென்ட் என்ன?

அரசியலில் எந்த அனுபவமும் இல்லையென்றாலும் மக்கள் ஆதரவால் விஜய் ‘முதல்வராகியிருக்கிறார். த.வெ.க. ஆட்சியைப் பார்க்கும்போது, கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயமாக அவர்களால் நிறைவேற்ற முடியாது என்பது தெரிகிறது. பெண்கள், இளைஞர்கள் ஆதரவு தனக்கு இருக்கிறது என்பதை நிரந்தரமான வெற்றியாக விஜய் நினைக்கக் கூடாது. அமோக ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்தவர்களை அடுத்த தேர்தலிலேயே மக்கள் அடியோடு தூக்கிப்போட்ட வரலாறு இங்கே உண்டு.

முதல்வர் விஜய் சட்டசபையில் அதிக நேரம் உட்கார்வது நல்லது. அதேவேளையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் திசை திருப்புகிறார். இது தவறு. செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்க, இன்னும் சினிமா படப்பிடிப்பு மனநிலையிலேயே இருக்கிறது தவெ.க.”

டெண்டர்களில் வெளிப்படைத் தன்மை, பார்ட்டி ஃபண்ட் நிறுத்தம் என்று ஊழலுக்கு எதிரான போக்கே சிறந்த நிர்வாகம்தானே?

“துவக்கத்தில் ஊழலற்ற ஆட்சி’ என்று சொன்னதெல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், ஒவ்வொரு துறைகளிலும் ஃபைல்கள் ஏன் மூவ் ஆகாமல் முடங்கியே கிடக்கின்றன? லஞ்சம் வாங்காமல் கட்டிட லேஅவுட்டுக்கு அனுமதி தருகிறோம் என்கிறார்கள். ஆனால் எந்த வருஷம் அனுமதி கிடைக்கும்? சம்பந்தப்பட்ட கோப்புகளை முடக்கிவைப்பதன் பின்னணி என்ன? லஞ்ச எதிர்பார்ப்புதானே. என்னதான் முதல்வர்  நேர்மையான ஆட்சி தருகிறேன்’ என்று வசனம் பேசினாலும், அமைச்சர்கள் சிலவற்றை பேசுவதாக தகவல்கள் வருகின்றன. கீழே ஊழல் இல்லாத நிலையை இன்னும் பார்க்க முடியவில்லை.”

சினிமாவிலிருந்து வந்த கமல் மெகா சறுக்கலை சந்திக்க, விஜய் அமோக ஆதரவைப் பெற்றிருக்கிறார். இந்த முரண்பாட்டுக்கு காரணம் என்ன?
“2021ல் கமல் தேர்தலில் நின்றபோது பத்தாண்டு தோல்வியில் இருந்த தி.மு.க. மத்திய அரசுக்கு எதிராக எடுத்த பல போராட்டங்கள் மூலமாக பல போலி நம்பிக்கைகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஈர்த்திருந்தது.
மேலும் அதி.மு.க. கூட்டணியும் கவனிக்கத்தக்க வெற்றியை அப்போது பெற்றது. அதனால், மாற்று சக்தியாக அப்போது மக்கள் கமலை பார்க்கவில்லை. ஆனால் 2026ல் விஜய் தேர்தலில் நின்ற நேரத்தில் தி.மு.க. அரசு மீதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். விஜய்யை வைத்து ஆன்லைனில் த.வெ.க. கட்டமைத்த பிம்பமும் கைகொடுக்க, அதிமுகவின் உட்கட்சி மற்றும் கூட்டணி குழப்பம் ஆகியவையும் சேர்ந்து மொத்தமாக விஜய்க்கு சாதகமாகிவிட்டது. கரூர் சம்பவம்கூட விஜய்க்கு
அனுதாப அலையாகத்தான் அமைந்தது. இவற்றையெல்லாம், த.வெ.க.வினர் கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டார்கள்?
‘பிரதமர் விஜய்’ என கிளம்பியிருக்கும் கோஷம் தாமரைக்கு சவாலா அல்லது காங்கிரஸை ஒழிக்க பா.ஜ.க. த.வெ.க இணைந்து நடத்தும் சீக்ரெட் ஆபரேஷனா?
“இது பா.ஜ.க.வுக்கான சவாலா அல்லது காங்கிரஸுக்கு எதிரான நடவடிக்கையா என்பதை த.வெ.க.வின் தலைமை ஓபனாக சொல்லட்டும். எப்போதுமே தங்கள் தலைவர் கூடுதல் உயரத்துக்கு செல்ல வேண்டும் என்று ரசிக மனப்பான்மையில் குரல் கொடுப்பது வழக்கம்தான். ‘ஆமா நான் பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போறேன்’ என விஜய் ஓபனாக சொல்லட்டுமே! அப்புறம் பார்ப்போம் ரியாக்ஷன்களை.”
தமிழ்நாட்டை வென்ற த.வெ.க.வின் ரீல்ஸ் ஆயுதம் இப்போது வட இந்தியாவிலும் ஓங்குகிறது. இது பா.ஜ.க.தலைமைக்கு அச்சத்தை தருகிறதா?
இவர்களைப் பார்த்து பயமா? ஏன் இந்த காமெடி! பா.ஜ.க.வின் 12 ஆண்டுகால சாதனை ஆட்சியின் மீதும், பிரதமர் மோடியின் திட்டங்களின் மீதும் தேச மக்கள் முழு நம்பிக்கையில் இன்றும், என்றும் இருப்பார்கள். அடுத்தும் தாமரையே என்று சர்வேக்களும் சொல்கின்றன.”
ஆனால், தமிழக சட்டமன்றத்தில் பா.ஜ.க.வின் எண்ணிக்கை நான்கிலிருந்து ஒன்றாகியுள்ளது. இது தாமரைக்கு பெரிய பின்னடைவுதானே?
“பெரிய பின்னடைவு எல்லாம் இல்லை. இதைவிட அதிக சறுக்கல்களைப் பார்த்திருக்கிறோம். அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம். தமிழகத்தில் தாமரை காணாமல் போய்விட்டது’ என பேசியபோதே மீண்டு வந்திருக்கிறோம். அதனால் எண்ணிக்கையை வைத்து எங்களை மதிப்பிட வேண்டாம். மிகப்பெரிய அலையிலும் எங்கள்
பிரதிநிதி ஒருவர் சட்டமன்றத்தில் உட்கார்ந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே. சூழல் மாறும்.”கோவை தெற்கிலேயே மீண்டும் நீங்கள் நின்றிருக்கலாமோ? அ.தி.மு.க. அழுத்தத்தால் தொகுதி மாறியதால்தான் தோல்வியா? “அது முடிந்துபோன விஷயம். மீண்டும் அதை ஆபரேஷன் பண்ணி பார்ப்பதில் என்ன இருக்கிறது? விரக்தியெல்லாம் எனக்கு கிடையாது. அதிகாரத்துக்காக மட்டும் நான் அரசியலுக்கு வரவில்லை. மேலும், ஒரு எம்.எல்.ஏ. ஐந்து வருடங்களாக என்னென்ன செய்தார் என பார்த்து மக்கள் இந்த தேர்தலில் ஓட்டு போடவில்லை. மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள்.”
அ.தி.மு.க.வில் நடக்கும் பிளவுகளைப் எப்படி பார்க்கிறீர்கள்?
“மிகுந்த வேதனையோடு பார்க்கிறோம். ப்ச். வேறு என்ன சொல்ல!” சமீபத்தில் நீங்கள் ‘அரசியலில் நிரந்தர எதிரியில்லை’ என சொன்னதை வைத்து, பா.ஜ.க. – தி.மு.க. கூட்டணி மீண்டும் உருவாகலாம் என எடுத்துக்கொள்ளலாமா?
“நான் மீண்டும் சொல்கிறேன், அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லை! அந்தந்த காலகட்டத்தில் எப்படி நடக்கிறதோ அதுதான். இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்”

Source link