புதுடில்லி: தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தல்பறக்கும் படை சோதனைகளில் இதுவரை பணம், மதுபானம்

புதுடில்லி: தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தல்பறக்கும் படை சோதனைகளில் இதுவரை பணம், மதுபானம் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்ட 856 கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேர்தல் சுமூகமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் 2,283 மற்றும் மேற்கு வங்கத்தில் 2,728 என மொத்தம் 5,011 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இத்துடன், தமிழகத்தில் 2,222 மற்றும் மேற்கு வங்கத்தில் 3,142 என மொத்தம் 5,363 கண்காணிப்பு குழுவினர் பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் பிப்.,26 முதல், பணியில் ஈடுபட்டு பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

17 ம் தேதி வரையிலான கணக்கின்படி

தமிழகத்தில் மட்டும்

ரொக்கம் – 78 கோடி

மதுபானம் – 97,107 லிட்டர் ( இதன் மதிப்பு ரூ.3 கோடி)

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.74 கோடி

விலைஉயர்ந்த பொருட்களின் மதிப்பு -ரூ.105 கோடி

இலவச பொருட்களின் மதிப்பு – ரூ.350 கோடி

என மொத்தம் 438 கோடி ரூபாய்க்கு அளவுக்கு பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில்

ரூ.21 கோடி ரொக்கம்

ரூ.81 கோடி மதிப்புள்ள

31,94,621 லிட்டர் மதுபானம்

ரூ.100 கோடி மதிப்பு போதைப்பொருட்கள்

ரூ.54 கோடி மதிப்பு விலைஉயர்ந்த பொருட்கள்

ரூ.172 மதிப்பு இலவச பொருட்கள் என மொத்தம் 427 கோடி ரூபாய் அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் மொத்தம் 865 கோடி அளவுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Source link