புதுடில்லி: ''மற்றும் பெண்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்ட திமுக காரணமாக தமிழகம் எதையாவது பெறுவதற்கு பதிலாக

புதுடில்லி: ”மற்றும் பெண்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்ட திமுக காரணமாக தமிழகம் எதையாவது பெறுவதற்கு பதிலாக இழப்புகளை சந்திக்க நேரிடும்,” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மகளிர் இட ஒதுக்கீடு குறித்து அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் வெளியிட்ட சமூக வலைதள அறிக்கையை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: காங்கிரசின் ராகுல், திமுகவின் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் வெறுப்புணர்வு மிக்க எதிர்க்கட்சிகள் எவ்வாறு தமிழகத்திற்கு லோக்சபாவிலும், சட்டசபையிலும் பெணகளுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வாய்ப்பை இழக்க செய்துள்ளன என்பதை அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் மிகச்சிறப்பாக சுட்டிக்காட்டி உள்ளார்.

கண்மூடித்தனமான வெறுப்புணர்வு, மாநிலத்தின் ஒட்டுமொத்த வாய்ப்புகளையும், பெண்களின் வாய்ப்புகளையும் பெரிதும் பாதித்துள்ளது. குறுகிய கண்ணோட்டம், பிடிவாதம், தொலைநோக்கு பார்வையற்ற தன்மை மற்றும் பெண்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்ட திமுக காரணமாக தமிழகம் எதையாவது பெறுவதற்கு பதிலாக இழப்புகளை சந்திக்க நேரிடும்.

பிரதமர் உறுதியளித்து இருந்த நன்மை பயக்கும் முன்முயற்சியில் அங்கமாக இணைய நீங்கள் மறுத்துவிட்டீர்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Source link