விஜய் சேதுபதி சர்ச்சை: பிக் பாஸ் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லீடர்னா என்னனு தெரியாமல், லீடர்ஷிப்னா என்னனு தெரியாமல், பிரச்சனைனு வந்துவிட்டால் எதிரணியை கை காட்டி பழி போடுவது, தெறித்து ஓடுவது மோசம் என்றார்.அவர் பிக் பாஸ் வீட்டு லீடரை பற்றி பேசிய இந்த விஷயம் தமிழகத்தில் நடக்கும் விஷயத்திற்கு பக்காவாக பொருந்துகிறது. அவரை விமர்சிக்க விஜய் சேதுபதி யார் என சிலர் அவரை விளாசி வருகிறார்கள்.
விஜய் சேதுபதி பேசியதை கேட்டு வேறு யாருக்குமே கோபம் வரவில்லை. ஆனால் அந்த ஆட்கள் மட்டும் ஏன் இப்படி கதறுகிறார்கள், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விஜய் சேதுபதியை நீக்கச் சொல்கிறார்கள் என சினிமா ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
விளக்க அறிக்கை: தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை விட விஜய் சேதுபதி பேசியது தான் மூன்று நாட்களாக அதிகம் பேசப்படும் விஷயமாக இருக்கிறது. இந்நிலையில் அறிக்கை ஒன்றை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறது விஜய் டிவி. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
பிக் பாஸ் 10 நிகழ்ச்சி என்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டும் தான். நிகழ்ச்சியில் வரும் சூழல்கள், விவாதங்கள் எல்லாம் அந்த நிகழ்ச்சியை பற்றி மட்டும் தான் என புரிந்து கொள்ள வேண்டும். நிகழ்ச்சியில் பேசப்படுவது வெளியே யாராவது தனி நபர், அமைப்பு, கொள்கை அல்லது சூழல்களை குறிப்பது கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையை பார்த்த சிலரோ, அந்த பயம் இருக்கட்டும். மன்னிப்பு கேட்க வைத்துவிட்டோம் பார்த்தீர்களா?. அப்படியே அந்த விஜய் சேதுபதியையும் தனியாக மன்னிப்பு கேட்கச் சொல்லவும் என்கிறார்கள்.
மற்றவர்கள் கூறியிருப்பதாவது, விஜய் டிவி ஒன்னும் மன்னிப்பு எல்லாம் கேட்கவில்லை. பிக் பாஸ் வீட்டில் பேசுவது அந்த வீட்டுக்கு மட்டும் தான். வெளியே உள்ள ஆட்கள் தவறாக புரிந்து கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது என்று தான் கூறியிருக்கிறார்கள். விஜய் டிவி ஆட்கள் குசும்புக்காரர்கள். ஆங்கிலத்தில் அறிக்கை வெளியிட்டது ஏன் என்பது புரிந்துவிட்டது என்கிறார்கள்.
இதற்கிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியின் சிறந்த தொகுப்பாளர் என்றால் அது விஜய் சேதுபதி இல்லை விண்வெளி நாயகன் கமல் ஹாசன் தான். அவரும் பிக் பாஸ் மேடையில் அரசியல் பேசியிருக்கிறார். ஆனால் அவர் பேசியதை பார்த்து எந்த கட்சியும் கொந்தளித்து அவரை திட்டவில்லை. விஜய் சேதுபதி கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இல்லை என்றால் பெயர் கெட்டுப் போய்விடும் என்று சினிமா ரசிகர்கள் கூறுகிறார்கள்.
விஜய் சேதுபதி அமைதி:நாற்காலி, அதிகாரம், தலைமை பற்றி தான் பேசியதை பார்த்துவிட்டுஒரு கும்பல் தன்னை விளாசுவதை பார்த்து அமைதியாக இருக்கிறார் விஜய் சேதுபதி. அதை பார்த்த சினிமா ரசிகர்கள் இருவிதமாக பேசுகிறார்கள். ஒரு சிலரோ, விஜய் சேதுபதி பயந்துவிட்டார் என்கிறார்கள். மேலும் சிலரோ, கதறும் கும்பலை லெஃப்ட் ஹேண்டில் டீல் பண்ணுகிறார் சேதுணா என்கிறார்கள். ஆக, பிக் பாஸ் வீட்டு ஜனநாயக அறையில் ஆரம்பித்த விஷயம் பொதுவெளியில் பூதாகரமாக வெடித்துவிட்டது.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
அது மட்டும் அல்ல தற்போது ஜனநாயக அறையில் போட்டியாளர்கள் பேசுவதையும் வெளியே நடப்பதுடன் ஒப்பிட ஆரம்பித்துவிட்டார்கள் மக்கள். இந்நிலையில் தான் விஜய் டிவி சார்பில் விளக்கம் அளித்திருக்கிறார்கள். அதாவதை கேம் ஷோவை கேம் ஷோவாக மட்டும் பாருங்கள் என்கிறார்கள்
Source link
