ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.. மொத்தம் 25,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.. ஒற்றையர் பிரிவில் பட்டம் செல்பவர்களுக்கு 2000 டாலர் பரிசாக வழங்கப்பட உள்ளது..
மேலும் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்திய வீரர்கள் சர்வதேச வீரர்களுடன் நேரடியாக மோதுவதற்கும் தங்களுடைய திறமையை நிரூபிப்பதற்கும் இந்த போட்டி நல்ல வாய்ப்பாக அமைகிறது..
இளம் வீரர்களுக்கு சர்வதேச அனுபவம் கிடைப்பதுடன் இந்திய பேட்மிண்டனின் எதிர்கால வளர்ச்சிக்கும் இத்தகைய போட்டிகள் துணை புரியும்..
பேட்மிண்டன் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு வேகம் மட்டும் அல்லாமல் சரியான நேரத்தில் முடிவெடுக்கும் திறன் ஆகியவையும் அவசியம்.. எதிராளியின் ஆட்ட உத்தியைக் கணித்து அதற்கேற்ப ஷாட்களை மாற்றி விளையாடுவது வெற்றியை தீர்மானிக்கும்.. நீண்ட நேரம் நீடிக்கும் ரேலிகளில் உடல் வலிமையும் மன உறுதியும் முக்கிய பங்கு வகிக்கின்றன..
பெங்களூருவில் நடைபெறும் இத்தகைய சர்வதேசப் போட்டிகள் இளம் விரர்கள், தங்கள் பலம், பலவீனங்களை அறிந்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளுக்குத் தங்களை தயார் படுத்திக் கொள்ளவும் உதவுகின்றன..
பேட்மிண்டன் போட்டிகளில் ஒவ்வொரு புள்ளியும் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியத்துவம் கொண்டது.. சர்வீஸ் போடுவது முதல் ஸ்மாஷ் அடிப்பது வரை வீரர்களின் துல்லியமும் வேகமும் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும்.. ரசிகர்களுக்கும் ஒவ்வொரு ரேலியும் விறுவிறுப்பான அனுபவத்தை தரும்..
பெங்களூருவில் நடைபெறும் இந்தச் சர்வதேசப் போட்டி, இந்தியாவில் பேட்மின்டன் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் நிகழ்வாக அமையட்டும். இளம் வீரர்கள் சர்வதேச அனுபவத்தைப் பெற்று, எதிர்காலத்தில் உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும். விளையாட்டை ரசிப்பதோடு மட்டுமல்லாமல், வீரர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் புரிந்துகொள்வோம். திறமையை வளர்க்கும் இத்தகைய போட்டிகளுக்கு ரசிகர்களின் ஆதரவும் தொடர்ந்து கிடைக்கட்டும்.
