பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து இன்று மீண்டும் திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5 ஆக பதிவு

-நமது நிருபர்-

நேபாள எல்லையை ஒட்டிய திபெத் பிராந்தியத்தில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பேரழிவு நிகழ்ந்த சில நாட்களிலேயே இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் மட்டும் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அளவுக்குப் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 14 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவாகியுள்ளது என்றும் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை; நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மீட்பு படையினர் போராடி வருகின்றனர். அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Source link