-நமது சிறப்பு நிருபர் –
பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா லோக்சபாவில் இன்று(ஜூலை 29) குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேறியது.
‘நீட்’ எனப்படும், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட மத்திய அரசு, பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு சட்டம் – 2024ல் திருத்தம் செய்ய முடிவு செய்தது. அந்த வகையில், லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா – 2026 நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.
புதிய மசோதா ஏன்?
இதன் மூலம், அரசு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்களை கசிய விடுவோருக்கு, அதிகபட்சம், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், இந்த மசோதா மீது விவாதம் நடக்கவில்லை.
பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா மீது விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் நேற்று ஒப்புக்கொண்டன. தொடர்ந்து, அந்த மசோதாவை பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்தார். இதன் மீதான விவாதம் நேற்று இரவு 11 மணி வரை நீடித்தது. இன்றும் விவாதம் நடந்தது. அதில் ஆளுங்கட்சி
விவாதத்தை தொடர்ந்து இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகு லோக்சபா நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மசோதாவை ராஜ்யசபாவில் விரைவில் மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வந்தே மாதரம் மசோதா நிறைவேறியது
தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலுக்கு தேசிய கீதத்துக்கு இணையான சட்டப்பாதுகாப்பு வழங்கவும், அப்பாடலை அவமதிப்பதற்கு தண்டனை கிடைக்கச் செய்யும் தேசிய கவுரவ திருத்த மசோதா (2026) ராஜ்யசபாவில் குரல் ஓட்டெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.
