தமிழ்நாட்டில் பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் மழைப்பொழிவு இன்று சற்று குறைவாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இழிவுப்படுத்துவது தான் த.வெ.க-வின் வியூகமா? பெண்ணாகவும் மேயராகவும் பல முறை பேசியும் மவுனம் காக்கும் விஜய் – பிரியா குற்றச்சாட்டு
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் அடுத்த 24 மணிநேரம் மழை அப்டேட்.
மழை மேகங்கள் பொன்னேரி – பழவேற்காடு பகுதியை நோக்கி வடக்கு திசையில் நகர்ந்துள்ளதால், சென்னை முழுவதும் மழைப் பொழிவு சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பகல் நேரத்தில் சூரியன் வெளிப்படக்கூடும், எனினும் ஆங்காங்கே லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இருப்பினும், இன்றிரவு முதல் நாளை காலை வரை மீண்டும் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. நேற்று இரவு பெய்த மழையின் தீவிரம் இதில் இருக்காது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
