போக்குவரத்து சிக்னல் தடுப்பில் கார் மோதி 3 வாகனங்கள் சேதம்

Summary

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்ற 3 இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியதுடன், புதூர் காவல் உதவி மையத்தின் மீதும் மோதியது.

சென்னை அம்பத்தூர் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 50). இவர் தனது சொகுசு காரில் வீட்டிலிருந்து கள்ளிக்குப்பம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது போக்குவரத்து சிக்னல் பகுதியில் காரை நிறுத்துவதற்காக பிரேக்கை அழுத்துவதற்குப் பதிலாக, தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதாகக் கூறப்படுகிறது.

விபத்து

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்ற 3 இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியதுடன், புதூர் காவல் உதவி மையத்தின் மீதும் மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த இடத்தின் அருகேயே மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. கார் சிக்னல் தடுப்பில் மோதி நின்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Source link