போதையில் 19 வயது மகளுடன் தந்தை..!! நேரில் பார்த்த தாய்..!! நள்ளிரவில் கதறிய குடும்பம்..!! திருப்பூரில் திடுக்கிடும் சம்பவம்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

திருப்பூர் அவிநாசி ரோடு அனுப்பர்பாளையம் வீரமாருதி தெருவை சேர்ந்தவர் விசாலாட்சி (40). மகளிர் சுயஉதவிக் குழு தலைவியான இவருக்கு, முதல் கணவர் இறந்த பிறகு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சமையல் மாஸ்டரான விஜயபாலன் (42) என்பவருடன் 15 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பத்துடன் திருப்பூரில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையான விஜயபாலன் தொடர்ந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நள்ளிரவில் போதையில் வீட்டிற்கு வந்த விஜயபாலன், தூங்கிக் கொண்டிருந்த தனது 19 வயது வளர்ப்பு மகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார். அப்பெண் அலறிய சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் விசாலாட்சி, கணவரின் இழிசெயலை தட்டிக்கேட்டு ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த விஜயபாலன், அரிவாளை எடுத்து விசாலாட்சியின் கழுத்தில் சரமாரியாக வெட்டியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

கண்முன்னே தாய் கொல்லப்பட்டதைக் கண்டு உறைந்துபோன 19 வயது மகள், சாமர்த்தியமாக கழிப்பறை செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறி, கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் கதவை உடைத்துக் கொண்டு வெளியேறிய விஜயபாலன், தனது இரு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினார்.

தகவலறிந்து விரைந்து வந்த 15-வேலம்பாளையம் போலீஸார் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, சேலம் மாவட்டம் சங்ககிரியில் பதுங்கியிருந்த விஜயபாலனை கைது செய்தனர். அவருடன் இருந்த 2 சிறுவர்களும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். வளர்ப்பு மகளை காப்பாற்ற முயன்ற தாய் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அது ஒரு “டீனேஜ் ட்ரீம்”..!! 16 வயது மாணவனுடன் ஆசை தீர உல்லாசம் அனுபவித்த டீச்சர்..!! கோர்ட்டில் கொடுத்த ட்விஸ்ட் வாக்குமூலம்..!!

Next Post

Fri Sep 11 , 2026

வட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், கிழக்கு உத்தர பிரதேசம், உத்தராகண்ட், ஹிமாச்சல பிரதேசத்தில் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கங்கை, யமுனையில் வெள்ளம் அபாயகட்டத்தை தாண்டி ஓடுவதால், வடமாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பீகாரில் நிலைமை மிக மோசமாக உள்ளது. கோஷி நதியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வெள்ளம் கரைபுரண்டு […]

Bihar 2026

Source link