மக்களே உஷார்.! சர்க்ரைக்கு பதிலாக கலக்கப்படும் வேதிப்பொருள்.! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி.!

பெட்ரோலில் 20% எத்தனாலை கலப்பதற்கு கரும்பின் தேவை அதிகம் என்பதால், நாட்டில் சர்க்கரைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதனை மத்திய அரசு மறுத்துள்ளது. இ-20 பெட்ரோலுக்கும், சர்க்கரை விலை உயர்விற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆனால் சர்க்கரை தட்டுப்பாடு காரணமாக இதன் விலை உயர்வது, அடித்தட்டு மக்களைத் தான் அதிகம் பாதிக்கிறது.

சர்க்கரை விலை உயர்வால் திருநெல்வேலியில் அல்வா-வின் விலை கூடுதலாக ரூ.20 வரை உயர்ந்துள்ளது. இதுதவிர பேக்கரி கடைகளில் இனிப்புகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. சர்க்கரையின் அதிக தேவையை ஈடுகட்ட தற்போது செயற்கையாக இனிப்பைக் கூட்டும் Xylitol என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த செயற்கை வேதிப்பொருளை பயன்படுத்தப்பட்ட இனிப்புகளை சாப்பிட்டால் மாரடைப்பு மற்றும் இதயக் கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஜெர்மனியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. Xylitol இரத்தத்தில் உள்ள தட்டுக்களை வழக்கத்தை விட வேகமாக உறைய வைத்து விடும். இதனை அதிகம் உட்கொள்வது ஆபத்தாக மாறலாம் எனவும், கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே இனிப்பு வகைகளை குறைவாக எடுத்துக் கொள்வது தான் நல்லது. இந்நிலையில் சர்க்கரைக்கு பதிலாக வேறொரு வேதிப்பொருள் சேர்க்கப்படுவது, மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கக் கூடும். ஆகையால் பொதுமக்கள் சற்று கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

Source link