இன்று திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி, மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால்கள் ஆகியவை வழங்கப்பட்டது.
இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அமைச்சர் ரமேஷிடம் அளித்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், பெறப்பட்ட மனுக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘மக்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து, அவர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதே நமது அரசின் நோக்கம். திருச்சி கிழக்கு தொகுதி மக்களின் நலனுக்காக, மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலில் மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தப்படும்’ என அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
