NHAI: Toll Gate-ன் 20 கி.மீ-க்குள் வீடு இருக்கிறதா? ரூ.1,500 அல்லது ரூ.3,000-க்கு Local Pass!

நெடுஞ்சாலைப் பயணங்களின் போதும், நெடுந்தூரப் பயணங்களின் போதும் தான் நம்மில் பெரும்பாலானவர்களுக்குச் சுங்கச்சாவடிக் கட்டணம் குறித்த கவலை இருக்கும்.

ஆனால், சுங்கச்சாவடி அருகிலேயே வீடு அல்லது இருப்பிடம் இருப்பவர்களின் நிலையை யோசித்திருக்கிறீர்களா? அவர்களுக்காகத் தேசிய நெடுஞ்சாலைத்துறை புதிய திட்டத்தைக் கொண்டு வர உள்ளது.

என்ன திட்டம்?

தேசிய நெடுஞ்சாலைச் சுங்கச்சாவடிகளிலிருந்து 20 கி.மீ. சுற்றளவுக்குள் வசிக்கும் தனிநபர் வாகன உரிமையாளர்களுக்குச் சலுகை விலையிலான உள்ளூர் பாஸ் வழங்குவதே அந்தப் புதிய திட்டம். இந்தத் திட்டம் வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

NHAI அறிவிப்பு

பாஸுக்கு என்ன கட்டணம்?

நகராட்சி அல்லது உள்ளூர் நகர எல்லைக்கு வெளியே அமைந்துள்ள சுங்கச்சாவடிகளுக்கு: ஆண்டுக்கு ரூ.1,500,

நகராட்சி அல்லது உள்ளூர் நகர எல்லைக்குள் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளுக்கு: ஆண்டுக்கு ரூ.3,000.

யாருக்கு இந்தப் பாஸ் கிடைக்கும்?

> வணிக நோக்கமற்ற வாகனங்கள் இந்தப் பாஸைப் பெற்றுக்கொள்ளலாம்.

> சுங்கச்சாவடியின் சுற்றளவில் 20 கி.மீ.க்குள் வசிக்கும் தனிநபரின் வாகனங்களுக்கு இந்தப் பாஸ் கிடைக்கும்.

எங்கு செல்லும்… எங்கு செல்லுபடியாகாது?

இந்தப் பாஸ்…

> குறிப்பிட்ட சுங்கச்சாவடியில் மட்டுமே செல்லுபடியாகும்.

> தேசிய நெடுஞ்சாலைகள் அல்லது விரைவுச் சாலைகளிலோ, சேவைச் சாலை / மாற்றுப் பாதை வசதி உள்ள இடங்களிலோ இந்தச் சலுகைப் பாஸ் வசதி கிடைக்காது.

கட்டண மாற்றம்..?

இந்தப் பாஸ் கட்டணம் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி மாற்றப்படலாம்.

இந்தப் பாஸைப் பெறுவது எப்படி?

குறிப்பிட்ட சுங்கச்சாவடிக்குச் சென்று இந்தப் பாஸைப் பெற்றுக்கொள்ளலாம்.

Source link