மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில், தவெக ஆதரவு மற்றும் தோழமைக் கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று (09.09.2026) மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  உள்ளிட்ட முக்கியக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.

அதாவது முதல்வர் விஜய், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக நிறுவனத் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கூட்டணியின் பெயர் அறிவிப்பு, எதிர்காலச் செயல்பாடுகளுக்கான பொதுக் குறைந்தபட்சத் திட்டம் வகுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. 

அதோடு கூட்டணி ஒற்றுமையைப் பேணி, புதிய அரசியல் கூட்டமைப்பை வலுவாக்கும் நோக்கில் பனையூர் தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து தீவிர ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ வெளியாகியுள்ளது. அதே சமயம், தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகள், தங்களுக்குள் தனியாக நிர்வாகக் குழுக்களைக் கூட்டி விவாதித்த பின், இந்தத் தேர்தல் கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை எனப் புறக்கணிப்பு முடிவை எடுத்துதிருந்தன. மற்றொருபுறம் தமிழகத்தில் இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Source link