மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை முதல் அரசியல் கட்சியாக திமுக வெளியிட்டது. இதனையடுத்து தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்து, பணிகளையும் துவங்கி விட்டது. இதனிடையில் சில இயக்கங்கள், கட்சிகள் இடைத்தேர்தலுக்காக திமுகவுக்கு ஆதரவினை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் மல்லை சத்யாவின் திராவிட வெற்றிக் கழகம் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக அறிவிப்பட்டுள்ளது.
இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரு தொகுதிகளுக்கும் பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி திமுக சார்பாக மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமன், தாராபுரத்தில் சுகன்யா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுகவுக்கு திராவிட வெற்றிக் கழகம் ஆதரவு
இதனையடுத்து அவர்கள் தேமுதிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளை சந்தித்த ஆதரவு கோரி வாழ்த்து பெற்று வருகின்றனர். இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக திராவிட வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் மல்லை சத்யா செய்தியாளர்களிடம் பேசினார்.
மல்லை சத்யா செய்தியாளர்கள் சந்திப்பு
அவர் கூறுகையில், ஒரு இடைத்தேர்தல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் இயற்கை எய்தினார் என்றால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வரும். அல்லது நீதிமன்றத்தால் தகுதி இழப்பு செய்யப்பாட்டால் இடைத்தேர்தல் வரும். ஆனால் ஒரு உறுப்பினர் வாக்களித்த விரல் மை அழிவதற்கு முன்பாக சுய லாபத்துக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனை வாக்காளர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை
மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளார்கள். குறிப்பாக வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறவர்கள் மீது மிகப்பெரிய எதிர்ப்பு அலை வீசி கொண்டிருக்கிறது. எனவே திமுக சார்பாக நிறுத்தப்பட்டுள்ள பரந்தாமன் மகத்தான வெற்றி பெறுவார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சட்டமன்றம் சண்டை மன்றமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் போக்கு சரியில்லை.
மதிமுக கரைந்து போன கட்சி
எனவே ஜனநாயகத்தை காப்பதற்கு இன்று திமுகவை சார்ந்த திராவிட வெற்றி கழகத்தின் ஆதரவினை அளித்துள்ளோம். எங்களை சிரித்த முகத்துடன் அண்ணன் மு.க. ஸ்டாலின்வரவேற்றார் என்றார். மேலும் அவர் ஏற்கனவே இருந்த மதிமுக என்பது கரைந்து போன கட்சியாக ஆகியுள்ளது. தனது மகனுக்காக நிர்வாகிகளை இழந்துள்ளார். இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை இழந்திருக்கிறார் என வைகோ பெயரை குறிப்பிடாமல் விளாசினார் மல்லை சத்யா.
2026 தேர்தல்: தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை- டிடிவி தினகரன் ஓபன் டாக்
ராஜினாமா செய்தவர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு
தவெக கூட்டணியில் மதிமுக அங்கம் வகித்து வரும் நிலையில், அந்த கட்சியில் இருந்து பிரிந்த வந்த மல்லை சத்யா இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது. இதனிடையில் அதிமுகவில் இருந்து தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்களுக்கே மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட முதல்வர் விஜய் வாய்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source link
