வருகின்ற அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தேர்தல் பணிக்குழு மற்றும் கண்காணிப்பாளர்களை நியமித்துத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தேர்தல் கண்காணிப்பாளர்கள்
இரண்டு தொகுதிகளின் தேர்தல் பணிகளையும் கண்காணிப்பதற்காக அமைச்சர்கள் என். ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் CTR நிர்மல் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விஜய் போடும் ஸ்கெட்: டோட்டலா மாறும் தமிழக அரசியல் களம்…
தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு விவரங்கள்:
1. மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி:
பொறுப்பாளர்: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
இணைப் பொறுப்பாளர்கள்: அமைச்சர்கள் B. ராஜ்குமார், K. தென்னரசு, R. வினோத்
துணைப் பொறுப்பாளர்கள்: P. சரவணமூர்த்தி MLA, S. தியாகராஜன் MLA, B. விஜயராஜ் MLA, J. காமாட்சி MLA மற்றும் செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் M.S. பாலாஜி (எ) மணிகண்டன்.
2. தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி:
பொறுப்பாளர்: அமைச்சர் Dr. K.G. அருண்ராஜ்
இணைப் பொறுப்பாளர்கள்: அமைச்சர்கள் M. விஜய் பாலாஜி, C. விஜயலட்சுமி, லோகேஷ் தமிழ்ச்செல்வன்
துணைப் பொறுப்பாளர்கள்: S. பாலமுருகன் MLA, V. சத்தியபாமா MLA, K. ராம்குமார் MLA, C.S. திலீப் MLA மற்றும் M. சத்யா MLA.
கழகத் தோழர்களுக்குத் தலைவர் விஜய் வேண்டுகோள்:
நியமிக்கப்பட்டுள்ள குழுவினருக்கு அந்தந்தத் தொகுதிக்குட்பட்ட கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். வெற்றிச் சின்னமான விசில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும், விரைவில் தவேக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படும் என்றும் தனது அறிக்கையில் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
Source link
