சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. நடப்பு மாதத்தின் தொடக்கமான 1-ம் தேதி தங்கம் கிராமிற்கு ரூ.14,175-க்கும், சவரன் ரூ.1,13,400-க்கும் விற்பனையானது. மறுநாளே கிராமிற்கு ரூ.225 வரை சரிவடைந்து ரூ.13,950-ஆகவும், சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.1,11,600-ஆகவும் சரிவைச் சந்தித்தது. ஆனால், 3-ம் தேதி எதிர்பாராத விதமாக சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920-ஐ எட்டியதுடன், 4-ம் தேதி மேலும் ரூ.960 உயர்ந்து சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து, 5 மற்றும் 6-ம் தேதிகளில் சவரன் ரூ.1,13,520 என நிலையாக இருந்த நிலையில், 7-ம் தேதி சவரனுக்கு ரூ.1,13,040-ஆக வர்த்தகமானது. 8-ம் தேதி மீண்டும் சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ரூ.1,14,160-க்கு உயர்ந்த தங்கம், 9-ம் தேதி ரூ.1,000 வரை சரிந்து ரூ.1,13,160-ஐ அடைந்தது. 10-ம் தேதி மீண்டும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,14,040-ஆக மாறுபட்டது. நேற்று (செப்டம்பர் 11) காலையில் சவரனுக்கு ரூ.1,920 வரை அதிரடியாகக் குறைந்து ரூ.1,12,120-க்கு வந்தபோதிலும், மாலையில் மீண்டும் ரூ.1,120 உயர்ந்து சவரன் ரூ.1,13,240-க்கு வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, கிராமிற்கு ரூ.15 அதிகரித்து ரூ.14,170-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளி விலை நிலவரம்:
கடந்த ஐந்து நாட்களாக மாற்றமின்றி இருந்த வெள்ளி விலையில் இன்றைக்கும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. செப்டம்பர் 7 முதல் 10 வரை ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கு விற்பனையான நிலையில், நேற்று ரூ.250-ஆகக் குறைந்திருந்தது. இன்றைக்கும் அதே நிலைய நீடித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனையாகி வருகிறது.
