மத்திய அமைச்சர் ரவ்நீத் பிட்டு பதவி விலகல்

புதுடில்லி: பஞ்சாபைச் சேர்ந்த ரவ்நீத் சிங் பிட்டு, 50, ராஜஸ்தானில் இருந்து பா.ஜ., சார்பில் ராஜ்யசபாவுக்கு, 2024ல் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சராக அதே ஆண்டு ஜூனில் பதவியேற்றார்.

இடைத்தேர்தல் மூலம் தேர்வான அவரின் பதவிக்காலம், கடந்த ஜூனில் முடிவடைந்தது. எனினும், அவர் ராஜினாமா செய்யவில்லை.

ராஜ்யசபா எம்.பி., பதவி மீண்டும் வழங்கப்படாததை அடுத்து, மத்திய இணை அமைச்சர் பதவியை ரவ்நீத் சிங் பிட்டு நேற்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றார். பஞ்சாபில், 2027 பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

அங்கு ரவ்நீத் சிங் பிட்டுவை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க பா.ஜ., மேலிடம் முடிவு செய்துஉள்ளது.

Source link