மத்திய கல்வித்துறை புதிய அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு: அதிகாரிகளுடன் ஆலோசனை

புதுடில்லி: மத்திய கல்வித்துறையின் புதிய அமைச்சராக பிரகலாத் ஜோஷி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

நீட் கேள்வித்தாள் கசிந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரின் துறையானது, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் இன்று முறைப்படி மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;

மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்று உள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து, இப்பொறுப்பை அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி. கடமை உணர்வுடனும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

பொறுப்பேற்றதை தொடர்ந்து, அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் துறை ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, உயர்கல்வித்துறை செயலாளர் வினித் ஜோஷி, புதிய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அனில்குமார். அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Source link