இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவர தி.மு.க. மக்களவை குழுத் தலைவர் டி.ஆர். பாலு, எம்.பி.யும், மாநிலங்களவையில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி.யும் நோட்டீஸ் அளித்துள்ளனர். அதில், “நடைபெற பாராளுமன்ற கூட்டத் தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவை அலுவல் நடத்தை விதிகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பிற அலுவல்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்திடவும் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வரவும், மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளர்.
அந்த நோட்டீசில், காவிரி ஆற்றின் மீது முன்மொழியப்பட்டுள்ள மேகதாது சமநிலைப்படுத்தும் நீர்த்தேக்கம் (Mekedatu Balancing Reservoir) குறித்த கவலைகள், அதனால் பாதிக்கப்படும் மாநிலமான தமிழ்நாட்டின் மீதான அதன் தாக்கம் மற்றும் இது தொடர்பாக ஒரு தீர்ப்பாயத்தை அமைப்பதன் அவசியம் ஆகிய அவசர முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தை விவாதித்து தீர்மானத்தைக் கொண்டு வருதல்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
