சென்னை: சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. விடிய விடிய பெய்த கனமழைக்கு நகரின் பல பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மழையால் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ள, சென்னையின் 15 மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை முதல்வர் விஜய் நியமித்தார். மீட்பு பணிகளை துரிதப்படுத்த அவர்களுக்கு உத்தரவிட்டார்.
சென்னையில் மழை வெள்ள பாதிப்பு, மீட்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு செய்தார். ரிப்பன் மாளிகையில் உள்ள மழை கால கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார். மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். அமைச்சர்கள் ஆதவ், அருண்ராஜ், ராஜ்மோகன், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
