ஊர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்… சந்தோஷத்தில் ரேவதி, ஷாக்கான சாமுண்டீஸ்வரி! – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் கடந்த எபிசோடில் ராஜராஜன் சாமி பற்றிய உண்மை சாமுண்டீஸ்வரிக்கு தெரியவந்த நிலையில், இன்று நடைபெறவிருக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தவுள்ளன. ராஜராஜன் குறித்த உண்மையை அறிந்த சாமுண்டீஸ்வரி கடும் கோபமடைகிறாள். இதையடுத்து ராஜராஜனை நேரடியாக சந்தித்து சரமாரியாக திட்டி தனது ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறாள்.
மறுபக்கம், கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் ரேவதி பரதநாட்டியம் ஆடவுள்ளதாக முடிவு செய்யப்படுகிறது. இதற்காக சிறப்பு போஸ்டர்கள் தயாரிக்கப்பட்டு ஊர் முழுவதும் ஒட்டப்படுகின்றன. இதனால் ரேவதி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாள். இந்த நேரத்தில் சந்திரகலா, சாமுண்டீஸ்வரியை அழைத்து அந்த போஸ்டரை காட்டுகிறாள். அதில் ரேவதி, “ராஜராஜன் – சாமுண்டீஸ்வரி மகள்” என குறிப்பிடப்பட்டிருப்பதை பார்த்த சாமுண்டீஸ்வரி கடும் அதிர்ச்சி அடைகிறாள்.
உடனே ரேவதியின் வீட்டிற்கு சென்று, “நீதான் என் பொண்ணு இல்லன்னு சொல்லி இருக்கேன்ல… அப்படி இருக்கும்போது எதுக்கு போஸ்டர்ல எங்க பேரைப் போட்டிருக்க?” என்று கோபமாக கேள்வி எழுப்புகிறாள். இதனைத் தொடர்ந்து, வெளியே சென்றிருக்கும் கார்த்தியின் கைக்கு ஒரு நோட்டீஸ் கிடைக்கிறது. அதை பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைகிறார்.இந்த சம்பவங்கள் அடுத்து என்ன திருப்பத்தை ஏற்படுத்தப் போகின்றன? கார்த்திக் கையில் கிடைத்த நோட்டீஸில் என்ன இருக்கிறது? சாமுண்டீஸ்வரியின் அடுத்த முடிவு என்ன? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கயல் வெளியிட்ட போட்டோ.. கொந்தளித்த ஆதி! ஜீவா – மீனாட்சியை பிரிக்க அப்பத்தாவிடம் முறையிட்ட ரம்யா.. வாகை சூடவாவில் இன்று!
இன்றைய வாகை சூடவா எபிசோடில் குடும்பத்தில் புதிய பரபரப்பு உருவாகிறது. கடந்த எபிசோடில் ஜீவாவை வீட்டுக்கு அழைத்து வர மனோ முயற்சி செய்தாலும், ஜீவா அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தான். இந்த சூழ்நிலையில் இன்று திருமணமான பெண்கள் நீண்ட நாட்கள் தங்கள் பெற்றோர் வீட்டில் இருப்பது சரியல்ல என்று நினைக்கும் சுமதி, எப்படியாவது தனது மகள்களை மீண்டும் மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்.
மற்றொரு பக்கம், மனோ வருத்தப்படுவதைக் கவனிக்கும் சக்தி, மருமகள்களை மீண்டும் இந்த வீட்டிற்கு அழைத்து வர வேண்டுமென உறுதியுடன் செயல்படத் தொடங்குகிறார். இந்நேரத்தில் ஜீவாவும் மீனாட்சியும் சேர்ந்து மாவு அரைக்கும் போது எடுக்கப்பட்ட நெருக்கமான புகைப்படத்தை கயல் சமூக வலைதளத்தில் பதிவிடுகிறாள். அந்த புகைப்படத்தை பார்த்த ஆதி கடும் கோபமடைகிறான். இதுகுறித்து தனது அக்கா ரம்யாவிடம் பேசும் அவர், இப்படி போனால் மீனாட்சி கர்ப்பமாகிவிடுவாள் போல இருக்கிறது. ஏதாவது செய்யுங்கள்” என்று ஆதங்கப்படுகிறான்.
இதையடுத்து ரம்யா, அப்பத்தாவை நேரில் சந்தித்து, ஜீவா மற்றும் மீனாட்சியை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறாள். ரம்யாவின் கோரிக்கையை அப்பத்தா ஏற்றுக்கொள்வாரா? ஜீவா – மீனாட்சி உறவில் புதிய சிக்கல் உருவாகுமா? குடும்பத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆதாரத்தைக் காட்டிய சிவா.. அதிர்ந்து போன மோனிகா! இந்திராணி எடுத்த அதிரடி முடிவு என்ன? – அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அயலி கடந்த எபிசோடில் மோனிகா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்ட நிலையில், இன்றைய எபிசோடில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேற உள்ளன. செழியன் பணம் கொடுத்து இந்தச் சம்பவத்தை திட்டமிட்டு நடத்தச் சொன்னதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மோனிகா அதனை முற்றிலும் மறுத்து, இது ஒரு நாடகம் என்று கூறுகிறாள். ஆனால், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் சிவா முக்கியமான வீடியோ ஆதாரத்தை வெளியிடுகிறார்.
அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட ரிப்போர்ட்டரிடம் உண்மையை வெளிக்கொணரும் காட்சிகள் இடம்பெறுகின்றன. இதன் மூலம் இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் காளியப்பன் இருப்பது தெரியவருகிறது. இருப்பினும், அவரது பெயர் வெளிப்படையாக கூறப்படாமல் மறைக்கப்படுகிறது. இதையடுத்து, அண்ணன் மீது எந்தத் தவறும் இல்லை என்று இந்திராணியிடம் அயலி விளக்க முயல்கிறார். அவரது பேச்சை ஏற்றுக்கொள்ளும் இந்திராணி, செழியனை ஜாமினில் வெளியே எடுத்து வந்து வீட்டிற்கு அழைத்துவருமாறு கூறுகிறார்.
மறுபக்கம், சிவாவும் அயலியும் வீட்டிற்கு வந்ததும் காளியப்பன் கடும் கோபத்தில், “தேவையில்லாத விஷயங்களில் தலையிடுகிறீர்கள். இன்னும் பத்து நாட்களுக்குள் உங்களை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுகிறேன்” என்று சவால் விடுக்கிறார். அதற்கு பதிலடியாக அயலியும் சிவாவும், “தவறு செய்து கொண்டிருப்பது நீங்கள் தான். இந்த பத்து நாட்களில் யார் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்” என்று பதிலுக்கு சவால் விடுக்கின்றனர்.
இப்படி பரபரப்பாக நகரும் கதைக்களத்தில் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது? காளியப்பனின் திட்டம் நிறைவேறுமா, அல்லது சிவா மற்றும் அயலி உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவார்களா? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
