தொடர்ந்து ஆபத்தான சூழலில் மின்சாரப் பணிகளை செய்யும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு, விபத்து காலத்தில் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய காப்பீட்டுத் தொகை மற்றும் இழப்பீட்டு உரிமைகளை இனி சட்டபூர்வமாக உடனடியாகப் பெற இந்த அறிவிப்பு வழிவகுக்கும்.
மின்துறையின் இந்த அறிவிப்பு தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எதிராபார விபத்திற்கு பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்கும்.
மின்சாரக் கம்பங்களில் ஏறி, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு இந்த இழப்பீடு பொருந்தும்.
உயிரிழப்பு மட்டுமின்றி, தீவிரமாக காயமடைந்து நிரந்தர ஊனம் அடையும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு மருத்துவ செலவுகள் மற்றும் இழப்பீட்டுத் தொகையை ஒப்பந்ததாரர் மற்றும் மின் வாரியம் இணைந்து வழங்கிட வேண்டும் என்பது நிபந்தனை.
மின் துறையில் ஒப்பந்தப் பணியாளர்களை பணியமர்த்தும் ஒப்பந்ததாரர்கள், பணியாளர் ஈட்டுறுதி மற்றும் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் பணியாளர்களின் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். இதை செய்யத் தவறினால், முதன்மை நிறுவனமாக மின் வாரியமே பணியாளருக்கு இழப்பீட்டை வழங்கி விட்டு, பிறகு ஒப்பந்ததாரரிடம் வசூலித்துக் கொள்ளும்.
