ஆத்துார்:
மின் இணைப்புக்கு, 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் உதவி பொறியாளர் அய்யாசாமி, 39, ஒயர்மேன் சந்திரன், 54, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், காந்திபுரத்தை சேர்ந்தவர் விவசாயி லாபேஷ், 40. இவர், புதிதாக வீடு கட்டுவதற்காக, தற்காலிக மின்இணைப்பு கேட்டு, சில தினங்களுக்கு முன், மஞ்சினியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்தார்.
மின் உதவி பொறியாளர் அய்யாசாமி, 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லாபேஷ், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.போலீசார் ஆலோசனைப்படி, இன்று( ஜூலை 22) காலை, 10:00 மணிக்கு, அலுவலகத்தில் வைத்து, லாபேஷ், அய்யாசாமி, சந்திரன், ஆகியோரிடம் முன் பணமாக, 10,000 ரூபாயை வழங்கினார். அங்கு மறைந்திருந்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
