மின் தேவையை சமாளிக்க கூடுதலாக மின்சாரம் கொள்முதல்: தமிழ்நாடு மின் வாரியம் தகவல்

நீடித்த கோடை வெப்பத்தால் அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சீரான மின்விநியோகத்தை உறுதி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் மின் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், நீடித்த கோடை வெப்பத்தால் அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் – சீனா மின்நிறுவனத்துடன் உறுதி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் தீவிர நடவடிக்கை

இந்த ஆண்டு கோடை காலம் எதிர்பாராத அளவுக்கு நீடித்ததன் காரணமாக, மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது, அதேவேளையில் காற்றின் வேகம் குறைந்ததால், காற்றாலை மின் உற்ப்பத்தியும் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக சில நேரங்களில் மின்னழுத்த குறைபாடு போன்ற தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டன.

இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுகளிலிருந்து கூடுதலாக 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு மின் துறையின் (Grid) நிலையை சீராகவும், நம்பகத்தன்மையுடனும் உள்ளது. மேலும், மின் கட்டமைப்பு மாறுபாடுகள், மற்றும் மின் விநியோக நிலைமையை தொடர்ந்து மின்வாரிய தலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து உடனுக்குடன் உரிய உத்தரவுகள் வழங்கி வருகிறது. 

மின் விநியோக பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின் விநியோகம் சீரமைக்கப்பட்டு வருகிறது. மின்தடை ஏற்படும் நிலைமைகளை எந்தவித அலச்சியமும் இன்றி உடனடியாக சரிசெய்ய வேண்டும் என களப்பணியில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிட்டுள்ள மின்தடைகளை இயன்றவரை தவிர்க்கவும் களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு நாள் முழுவதும், குறிப்பாக இரவு நேரங்களிலும் சீரான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து வழிப்புடன் செயல்பட்டு வருகிறது. 

மேலும், மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் மின்சாரத்துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணி நேரமும் இயங்கும் நுகர்வோர் சேவை மையமான ‘மின்னகம்’ தை ”94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



Source link