மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவாரா நெதன்யாகு? இஸ்ரேல் தேர்தலில் பரபரப்பு

-நமது சிறப்பு நிருபர்-

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான தேர்தலில் இஸ்ரேல் மக்கள் ஓட்டளித்து வருகின்றனர்.

தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரிக் கூட்டணிக்கும், நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதியான காடி ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவியிலிருந்து அகற்ற பல்வேறு கட்சிகள் போராடி வருகின்றனர்.

எதிர்க்கட்சி சற்றே முன்னிலையில் இருந்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைப் பெறுவது சவாலாகவே உள்ளது. போரின் பின்னடைவுகள், பிணைக் கைதிகள் விவகாரம் மற்றும் நெதன்யாகு எதிர்கொள்ளும் ஊழல் வழக்குகள் போன்றவற்றால் அவருக்கு எதிராக அதிருப்தி நிலவுகிறது.

மொத்தம் 120 இடங்கள் உள்ளன. ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவை. ஓட்டுப்பதிவு நிறைவடைந்த பிறகு, அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகி, கட்சிகளுக்கு இடையே கூட்டணிகள் அமைக்கப்பட்ட பின்னரே இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார் என்பது இறுதி செய்யப்படும்.

Source link