முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் தமிழகத்தில் அமைக்கப்பட்டது

சென்னை: ‘தமிழக முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் நிறுவப்பட்டுள்ளது’ என, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: முதலீடு செய்வதை எளிதாக்குவது என்பது, ஒரு முதலீட்டு முடிவில் இருந்து செயல்படும் ஒரு நிறுவனமாக மாறுவதையும் எளிதாக்குவதாகும். அதனால் தான் நாங்கள் முதலீட்டு வசதி அமைப்பை வலுப்படுத்துகிறோம்.

தற்போ து, சட்டசபையில் நிறைவே ற்றப்பட்ட தமிழக வணிக எளிதாக்குதல் சட்ட திருத்த மசோதா, 2026 வாயிலாக, தமிழக முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆணை யம், ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு, 21 நாட்கள் காலக்கெடுவுடன், பல மாநில சட்டங்களை ஒரு பொதுவான முதலீட்டு வசதி கட்டமைப்பின் கீழ் கொண்டு வரும். இது, பெரிய முதலீடுகள் மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் முதலீடுகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கும்.

இதன் நோக்கம், ஒரு முதலீட்டு முன்மொழிவுக்கும், அதன் செயலாக்கத்திற்கும் இடையிலான நேரத்தை குறைத்து, தமிழகத்தை முதலீடு செய்யவும், வளரவும் மிகவும் கண்காணிக்க கூடிய இடமாக மாற்றுவது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய தலைவராக தலைமை செயலர், உறுப்பினராக தொழில் துறை செயலர் உட்பட, 20 பேர் இருப்பர்.

Source link