முதல்வர் ஜோசப் விஜய் இன்றைய தினம் சட்டமன்றத்தில் ஆற்றிய பதிலுரை தொடர்பாக திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பல பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் திமுகவின் துணை பொதுச்செயலாளர் எம்பி கனிமொழி, முதல்வரின் பேச்சு தொடர்பாக பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
சட்டமன்றத்தில் இன்றைய முதல்வர் ஜோசப் விஜய் தனது பதிலுரையில், எதிர்க்கட்சியான திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனையடுத்து அவருடைய பேச்சுக்கு திமுக தரப்பில் இருந்து எதிர்வினையாற்ற துவங்கியுள்ளனர். அந்த வகையில் திமுக துணை பொதுச்செயலாளர் எம்பி கனிமொழி, முதல்வர் விஜய்யின் பேச்சு குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில் சட்டசபை சர்க்கஸ் கூடாரமாக மாறியுள்ளதாக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source link
