உள்ளூர் சினிமா முதல் உலக சினிமாவை வீட்டில் இருந்தபடியே பார்க்கும் வகையில், ஒடிடி தளங்கள் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் வாரம் முழுவதும் வேலை செய்பவர்கள், வார இறுதியில், என்ன படம் பார்க்கலாம் என்று யோசித்து ஒடிடி தளங்களில் படங்களை தேடி வருகின்றனர். அதிலும் க்ரைம் மற்றும் சஸ்பென்ஸ் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. திரைப்படங்கள் மட்டும் இல்லாமல், வெப் தொடர்களும் எதிர்பார்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத 5 வெப் தொடர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
தி நைட் மேனேஜர் (The Night Manager)
2023ஆம் ஆண்டு சஸ்பென்ஸ், மிஸ்ட்ரி மற்றும் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் வெளியான தொடர் ‘தி நைட் மேனேஜர்’. ஆயுதக் கடத்தலை மையமாகக் கொண்டு, அதைச் சுற்றி நடைபெறும் பரபரப்பான சம்பவங்களையும் சதிகளையும் அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த தொடரில், மர்மம் நிறைந்த கதைக்களம் மற்றும் அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் காரணமாக திரில்லர் ரசிகர்களை கவரக்கூடிய தொடராக இது அமைந்துள்ளது.
நவம்பர் ஸ்டோரி (November Story)
தமன்னா நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான ‘நவம்பர் ஸ்டோரி’ கிரைம், மிஸ்ட்ரி மற்றும் திரில்லர் பின்னணியில் உருவான இந்த வெப் தொடர், வீட்டிற்குள் நடைபெறும் மர்மமான கொலை சம்பவத்தில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட தந்தை சிக்கிக் கொள்கிறார். அவரை அந்த வழக்கிலிருந்து அவரது மகள் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை பரபரப்பும் விறுவிறுப்பும் குறையாமல், மர்மங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த தொடரை ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
ஸ்பெஷல் ஓபிஎஸ் (Special OPS)
இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் முக்கிய தீவிரவாதியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடும் ரா (RAW) ஏஜெண்டின் கதையை மையமாகக் கொண்ட வெப் தொடர் ‘ஸ்பெஷல் ஓபிஎஸ்’. ஸ்பை, ஆக்ஷன், கிரைம் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவான இந்த தொடர் பரபரப்பான விசாரணை, எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்கள் நிறைந்த இந்த தொடரும் வீக் எண்டுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
ஆர்யா (Aarya)
கணவரை இழந்த ஒரு பெண் தனது குழந்தைகளை வளர்ப்பதுடன், குடும்பத்தின் கடன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வெப் தொடர் ஆர்யா. 2020ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன், கிரைம் மற்றும் திரில்லர் அம்சங்களைக் கொண்ட இந்த வெப் தொடர் குடும்பப் பொறுப்பு, குற்ற உலகம் மற்றும் போராட்டம் ஆகியவை கலந்த கதைக்களத்துடன் உருவான இந்த தொடரும் வீக் எண்டில் பார்க்க ஏற்ற தேர்வாக இருக்கும்.
தி ஃப்ரீலான்சர் (The Freelancer)
போர் சூழலில் சிக்கித் தவிக்கும் சிரியாவில் இருக்கும் இளம் பெண்ணை மீட்க முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் மேற்கொள்ளும் ஆபத்தான முயற்சியே ‘தி ஃப்ரீலான்சர்’ வெப் தொடர். ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் அமைக்கப்படட இந்த வெப் தொடரின் மையக்கதை. பரபரப்பான மீட்பு நடவடிக்கைகள், ஆக்ஷன் காட்சிகள் மற்றும் த்ரில் நிறைந்த சம்பவங்கள் தொடரை விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றன.
