முந்திரிக்கொட்டை அமைச்சர்கள்.. சட்டமன்றத்தை மல்யுத்த மன்றமாக மாற்றிவிட்டனர் – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம் – rb udhayakumar criticism aadhav nirmalkumar rajmohan assembly speech controversy

முதலமைச்சரிடம் ஏதேனும் கேள்விகள் எழுப்பப்பட்டால், அவருக்குப் பதிலாக அமைச்சர்களான ஆதவ், நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன்தான் ஆகிய 3 பேரினர்தான் முந்திரிக்கொட்டையாக முந்திக்கொண்டு பதில் அளிக்கின்றனர்.

இதனால் இவர்கள் சட்டமன்றத்தில் அறிவிக்கப்படாத முதலமைச்சர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். இது முதலமைச்சரின் இயலாமையைக் காட்டுகிறதா அல்லது அந்த 3 அமைச்சர்களின் திறமையா என்பதை மக்கள் உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும், பேரவையின் மாண்பைக் காற்றில் பறக்கவிட்டு சட்டமன்றத்தை மல்யுத்த மன்றமாக அவர்கள் மாற்றியுள்ளனர். முதலமைச்சரின் உரையின்போது அவரது உடல மொழியும், பேச்சும் இயல்பானதாகவோ அல்லது இயற்கையானதாகவோ தெரியவில்லை என்றும் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

Source link