விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் செப்டம்பர் 6-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதனைத்தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
துபாயில் வீட்டு வேலை செய்ய இவ்வளவு சம்பளமா? என்ன ஐ.டி லெவலுக்கு கொடுக்காங்க; ஷாக்கான இந்தியர்கள்
ஆரவ், ரித்விகா, முகன் ராவ், ஆரி அர்ஜுன், ராஜு ஜெயமோகன், முஹம்மது அசிம், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமரன், திவ்யா கணேஷ் ஆகியோர் இதுவரை நடைபெற்று உள்ள சீசன்களில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த 10-வது சீசனில் இதுவரைக்கும் நடக்காத பல அதிரடியான சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.
இதுவரை இல்லாத வகையில் இந்நிகழ்ச்சி தொடக்க மேடையிலேயே சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அது போக வீட்டிற்குள் 19 போட்டியாளர்கள் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சீசனில் ‘மகாநதி’ சீரியலில் நடித்த லட்சுமி பிரியா, நடிகை ஷாதிகா, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சாந்தினி தமிழரசன், நடிகர் பிளாக் பாண்டி, தொகுப்பாளர் வினோத் பாபு, நடிகர் குமரன், தொகுப்பாளர் ராகவன் ரகுநாதன், பிரித்விநாத், சீரியல் நடிகை முத்தழகி, நடிகை தன்யா, ஒப்பனை கலைஞர் அஷ்மிதா, சீரியல் நடிகர் அவினாஷ், நடிகர் முகேஷ், குக் வித் கோமாளி பிரபலம் அன்சார், சீரியல் நடிகை ஸ்வாமிதா, ஜாவித் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இது நிஜமாவே நடந்துச்சா?? இல்ல AI la edit uh 🙄 live pathavanga sollunga pa🤷♀️#biggbosstamil10#biggbosstamilpic.twitter.com/Lpy1y7wcsQ
— 𝓘𝓷𝓲𝔂𝓪 ❤️🔥 (@Iniya_Beloved) September 8, 2026
வந்த இரண்டாவது நாளில் இருந்தே பிக்பாஸ் வீட்டில் சண்டையும் வாக்குவாதமும் ஆக போய் கொண்டிருக்கிறது. இந்நிலையில், போட்டியாளர் அன்சார், பிக்பாஸ் வீட்டை விட்டு தப்பித்து ஓடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது ஏ.ஐ எடிட்டாக இருக்கும் என்று ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். மற்றொருபுறம் பிக்பாஸ் 1-வது சீசனின் போது நடிகர் பரணி சுவர் ஏறி குதித்தது போன்று அன்சாரும் செய்கிறாரே என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
