தப்பித்த முனியம்மா: பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் முதல் வாரமே எவிக்ஷன் இருக்காது என்று பார்வையாளர்கள் நினைத்தார்கள். ஆனால் முனியம்மா, தன்யா, சவின்யா ஆகியோரை நாமினேட் செய்தார் வினோத் பாபு. வழக்கமாக எந்த போட்டியாளரை வெளியேற்றுவது என்பதை ஓட்டு போட்டு முடிவு செய்வது பிக் பாஸ் பார்வையாளர்கள் தான்.
இம்முறை ஆரம்பத்தில் இருந்தே எல்லாவற்றையும் வித்தியாசமாக செய்து வரும் நிலையில் போட்டியாளரை வெளியேற்றும் பொறுப்பும் சக போட்டியாளர்களுக்கே கொடுக்கப்பட்டது. ஆயிரம் தான் முனியம்மா நை நைனு பேசிக் கொண்டே இருந்தாலும், கன்டன்ட் கொடுப்பதால் அவரை நிச்சயமாக வெளியேற்ற மாட்டார்கள் என்று மக்கள் நினைத்தது மாதிரியே நடந்துவிட்டது.
சவின்யா கிளம்பினார்: முனியம்மாவோ, தன்யாவோ இல்லை பெரிதாக எதுவும் செய்யாத பெங்களூர் பெண் சவின்யாவை தான் நீங்கள் இங்கு இருந்தது போதும் கிளம்புங்கமா என்று வெளியேற்றிவிட்டார்கள் சக போட்டியாளர்கள். அது குறித்த ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்களோ, என்ன பிக் பாஸ், இந்த சீசனில் ஓவரா மாறிட்டீங்க. எவிக்ஷன் செய்யப்பட்டது யாரென்று சொல்லாமல் ப்ரொமோ வீடியோ வெளியிட்டு வேடிக்கை காட்டுவீர்கள். ஆனால் இன்றோ வெளியேறிய ஆளை காட்டி அதுவும் இரண்டாவது வீடியோவிலேயே காட்டிவிட்டீர்களே என்று கேட்கிறார்கள்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து மேடைக்கு வந்த சவின்யாவிடம் உங்களின் அப்சர்வேஷனை ஷேர் செய்தால் அவர்களுக்கு கேம் ஆட வசதியாக இருக்குமே என்று கேட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அதற்கு சவின்யாவோ, இந்த குமரன் ஏன் அந்த வீட்டில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவருக்கு முன்பு என்னை ஏன் அனுப்பினார்கள் என்று தெரியவில்லை என்றார். அடுத்ததாக முனியம்மா பற்றி கேட்டதும் டபுள் ஃபேஸ் என்றார் சவின்யா. இரண்டு மூஞ்சினு சொல்கிறீர்களா என விஜய் சேதுபதி கேட்க, இரண்டு மூஞ்சி இல்லை முனியம்மாவுக்கு நாலு, ஐந்து மூஞ்சி இருக்கிறது என்று சொல்ல முனிக்கு ஒரே சிரிப்பு தான். ஒரு நாளுக்கு முன்பு நாமினேஷன் லிஸ்ட்டில் என் புகைப்படம் இல்லை. மறுநாள் இருந்தது. யாரு சார் உங்களுக்கு சாம்பிராணி ஊதுனது என வினோத் பாபுவை பார்த்து கேட்டார் சவின்யா.
பார்வையாளர்கள் கூறியிருப்பதாவது, மேடையில் இவ்வளவு கருத்தாக பேசும் நீங்கள், இதே மாதிரி பிக் பாஸ் வீட்டில் பேசியிருந்தால் வெளியேற்றியிருக்க மாட்டார்கள் சவின்யா. குமரன் ஏன் காப்பாற்றப்பட்டார் என எங்களுக்கும் தெரியவில்லை. எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கும் முனியம்மாவின் ஸ்ட்ராடஜி ஒர்க்அவுட் ஆகிவிட்டது. கடைசி வரை நம்மை கடுப்பேற்றிக் கொண்டே இருப்பார் போன்று என்கிறார்கள்.
மணிவண்ணன் சகதோரி: பிக் பாஸ் வீட்டிற்கு கண் நிறைய கனவுகளுடன் வந்த பிளாக் பாண்டிக்கு ஷுகர் அதிகமாகவே அவரை கிளம்பச் சொல்லிவிட்டார்கள்.நான் இங்கேயே இருந்து மருந்து மாத்திரை சாப்பிடுகிறேன், வெளியே மட்டும் போனு சொல்லாதீங்க பிக் பாஸ் என கண்ணீர் விட்டார் பாண்டி. அவர் இரண்டு நாட்களில் கிளம்பியதை அடுத்து வியாழக்கிழமை அன்று பிக் பாஸ் தி காமன்மேனில் கலந்து கொண்டு பிக் பாஸ் 10 மேடை வரை வந்த மணிவண்ணனை அழைத்து வந்தார்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
அவர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த நிலையில் அவரின் அக்கா உயிரிழந்துவிட்டார். முதலில் மணிவண்ணனின் அம்மா இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. அதை பார்த்த அவரின் அக்கா மகளோ, இறந்தது பாட்டி இல்லை என் அம்மா, மணிவண்ணனின் அக்கா என்று விளக்கம் அளித்தார். மணிவண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோதிலும், நீங்கள் வருவதற்குள் இறுதிச் சடங்கு முடிந்துவிடும். அதனால் வர வேண்டாம். பிக் பாஸ் வீட்டில் இருக்கவும் என தெரிவித்ததாக அக்கா மகள் கூறியிருக்கிறார்.
Source link
