விநாயகப் பெருமானே முழு முதற் கடவுளாக போற்றப்படுகிறார். எந்த ஒரு காரியத்தையும், வழிபாட்டினையும் துவங்குவதற்கு முன் விநாயகரை வழிபட்ட பிறகே மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும் என்பது ஐதீகம். வழிபாட்டில் முதல் பூஜை, விநாயகப் பெருமானுக்கு தான். கணபதி, கணேசன், விநாயகன், பிள்ளையார், ஆனைமுகன் என பக்தர்களால் பலவிதமான திருநாமங்களால் விநாயகர் அழைக்கப்படுகிறார்.
விநாயகரை வழிபட்ட பிறகு மற்ற தெய்வங்களை வழிபட்டால் தான் அந்த பூஜை, வழிபாடு முழுமை பெறும். அதோடு நாம் செய்யும் வழிபாட்டின் முழு பலனும் கிடைப்பதற்கும், அந்த வழிபாடு எந்தவிதமான தடையும் இல்லாமல் வெற்றிகரமாக நிறைவடைவதற்கும் விநாயகரின் அருள் மிக மிக முக்கியமான. விநாயகர் சதுர்த்தியில் விநாயகரை மனதார வழிபட்டு, அவரது அருளை பெறுவோம்.
விநாயகர் சதுர்த்தி வழிபாடு :
விநாயகப் பெருமான் அவதரித்த ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் என புராணங்கள் சொல்கின்றன. இதனாலேயே இதை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். முழு முதற்கடவுளாக இந்து மதத்தில் போற்றப்படும் விநாயகரை வழிபடுவதால் தடைகள், துன்பங்கள் விலகி வெற்றிகள், மகிழ்ச்சி, செல்வ செழிப்பு ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை. விநாயகப் பெருமானை வழிபட்டு விட்டு எந்த காரியத்தை துவங்கினாலும் தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும் என்பார்கள். அத்தகைய விநாயகப் பெருமானை அவர் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடுவதால் வாழ்வில் நமக்கு இருக்கும் துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.
விநாயகர் சதுர்த்தி 2026 :
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விநாயகரை வழிபட்டு, விநாயகரின் அருளை நாம் பெறுவதுடன் நம்முடைய நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் உள்ளிட்ட அனைவரும் பெற வேண்டும் என்பதால் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை வாட்ஸ்ஆப் மூலம் பகிர்ந்து மகிழ்வதற்கான அழகிய வாட்ஸ்ட்ஆப் படங்கள் இதோ…
