முன்னாள் தலைமைச் செயலாளர் மறைவு : முதல்வர் விஜய் இரங்கல்!

தமிழ்நாடு அரசின் 16வது தலைமைச் செயலாளராக கே.எஸ். சுகவனேஸ்வர் கடந்த 2002ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி முதல் டிசம்பர் வரை 2ஆம் தேதி வரை பணியாற்றினார். இந்நிலையில் சுகவனேஸ்வர் மறைவுக்கு, தமிழக முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர், இ.ஆ.ப (ஓய்வு) மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். சுகவனேஸ்வர் அவர்கள் 1967-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அலுவலராகத் தேர்வு செய்யப்பட்டு, திருநெல்வேலியில் உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கி, நீலகிரி மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், வருவாய் நிருவாக முதன்மை ஆணையர், சிட்கோ தலைவர் மற்றும் தலைமைச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து திறம்படப் பணியாற்றியவர் ஆவார். 

அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.