புதுடில்லி: டில்லி போலீஸின் தலைமையகத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், டில்லி கவர்னர் தரன்ஜித் சிங் சந்து, முதல்வர் ரேகா குப்தா, போலீஸ் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
கடந்த 5 ஆண்டுகளில் டில்லி போலீசாரின் செயல்பாடு குறித்தும், சட்டம், ஒழுங்கு பற்றியும் முக்கிய ஆய்வு மேற்கொண்டார். கடந்த 5 மாதங்களில் டில்லியில் நடந்த போராட்டங்களை கையாண்ட விதம், போராட்டக்காரர்கள் போலீசார் மீது நடத்திய தாக்குதல் பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.
போதைப்பொருள், ரவுடி கும்பலின் மோதல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் அவர் கேட்டறிந்தார். தேர்தல் ஆணையருக்கு எதிராக டில்லியில் நடத்தப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, இந்த ஆலோசனையை அவர் மேற்கொண்டார்.
