மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு; நிகழுமா அரசியல் மாற்றம்?

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்ட வி.எஸ். பாபு வெற்றி பெற்றார். இதனையடுத்து கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டது. அதன் அடிப்படையில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தலைமையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விவிபேட் (VVPAT) பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.

இதனையடுத்து வி.எஸ். பாபுவின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வாக்குச்சாவடி எண்கள் 1, 17, 28, 32, 75 உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேட் பதிவுகளை ஒப்பிட்டுப் பார்த்தபோது, பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் என்பதற்கான வேறுபாடுகள் இருப்பதாகவும், அதனால் சம்பந்தப்பட்ட அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் பதிவுகளையும் மீண்டும் சரிபார்க்க வேண்டும் எனவும் கொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபுவின் வெற்றி செல்லாது, மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்றதாக என அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்று (03-09-26) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என அவர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

Source link