இதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள பொது வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குக் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, அவருக்கு கடந்த மூன்று தினங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், தமிழ்க்கொடி காலில் கட்டுடன் படுக்கையில் படுத்திருந்த நிலையில், நேற்று நள்ளிரவில் வார்டுக்குள் புகுந்த எலிகள், அவரது காலில் காயம் இருந்த பகுதியை கடித்துக் குதறியுள்ளன. அதீத சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு எலிகள் கடித்தது தெரியவில்லை.
சக நோயாளிகள் கூறிய பிறகே எலி கடித்தது குறித்து அவருக்கு தெரிந்துள்ளது. இதுகுறித்து மூதாட்டியின் மகன் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
