மூவர்ணக் கொடியுடன் முதல்வர் விஜய், அஜித்

லண்டன்: கார் பந்தயம் நிறைவடைந்த பின்னர், பந்தயக் களத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் ரேஸர் அஜித்குமார் இருவரும் மூவர்ணக் கொடியுடன் இணைந்து இருக்கும் காட்சிகள் மற்றும் முதல்வர் ரேஸ் டிராக்கில் ஓடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழக முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்தை உருவாக்குவது, புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகிய நோக்கங்களுடன் நேற்று (செப்.,12) பிரிட்டன் சென்றார். அங்கு அவர் இந்த சில்வர்ஸ்டோன் கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதை தொடர்ந்து, சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் நடைபெற்ற மிச்செலின் லே மான்ஸ் கப் கார் பந்தயத்தை நேரில் சென்று முறைப்படி கொடியசைத்து தொடங்கி வைத்தார். லண்டன் சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்கியூட்டில் கார் ரேஸ் முடிந்த பிறகு மூவர்ணக் கொடியுடன் முதல்வர் விஜய் , அஜித்குமார் இருவரும் உள்ள காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகின.

அஜித் அணி 3ம் இடம்

லண்டனின் மிகவும் பிரபலமான ‘லீ மென்ஸ்’ கோப்பைக்கான கார் பந்தயம் நேற்று நடந்தது. நடிகர் அஜித், பந்தயத்தில் பங்கேற்றார். லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், இந்திய நேரப்படி, நேற்று இரவு 9.45 மணிக்கு துவக்கி வைத்தார். பந்தயத்தில் 44 கார்கள் பங்கேற்றன. சுமார் 2 மணி நேரம் கார் பந்தயம் நடந்தது. இதில், அஜித்குமாரின் அணி 3-வது இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Source link