மேற்கு வங்கத்தில் களைகட்டும் நவராத்திரி விழா!

கொல்கட்டா: மே .வங்கத்தில் நவராத்திரி திருவிழா, துர்கா பூஜை என்ற பெயரில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் அந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவி வழிபாடே, முதன்மை வழிபாடாக மாறுகிறது.

ஒவ்வொரு தெருவிலும், தற்காலிகமாக, தத்ரூபமான கலைநயத்துடன் கூடிய மாபெரும் பந்தல்கள் அமைக்கப்படும். உலக அதிசயங்களின் வடிவங்கள் அல்லது நடப்பு சமூகக் கருத்துக்களை மையமாகக் கொண்டு, இந்த பந்தல்கள் வடிவமைக்கப்படும். இங்கு, களிமண்ணால் செய்யப்பட்ட பிரமாண்டமான துர்கா தேவி, அரக்கன் மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில் காட்சியளிப்பார்.

மே.வங்கத்தில் 15 ஆண்டுகள் முதல்வராக இருந்த மம்தா பானர்ஜியை தோற்கடித்து, பா.ஜ.,வின் வெற்றிக்கு காரணமானவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா; பா.ஜ., ஆட்சி அமைத்த பின், ஐந்து முறை மேற்கு வங்கம் சென்றுள்ளார்; இவருடன் மிகவும் நெருக்கமாகிவிட்டார், முதல்வர் சுவேந்து அதிகாரி.

பா.ஜ., ஆட்சி அமைத்த பின், முதன் முறையாக வரும் துர்கா பூஜையை விமரிசையாக கொண்டாட முடிவெடுத்துள்ளார் சுவேந்து அதிகாரி. பிரமாண்ட பந்தல் அமைத்து பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அழைக்க முடிவெடுத்துள்ளார்; இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அடிக்கடி மேற்கு வங்கத்தின் பல பகுதிகளுக்கு சென்று, மக்களின் தேவைகளை தெரிந்து, அதற்கேற்றாற்போல் செயல்பட வேண்டும் என்பது மோடியின் அறிவுரை!

Source link