மே.வங்கத்தில் திடீர் பீதி; மம்தா கட்சி முக்கிய தலைவர் வீட்டில் வெடிவிபத்து; வீடு தரைமட்டம்

கோல்கட்டா: மம்தா கட்சியின் முக்கிய தலைவர் வீட்டில் பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் வீட்டின் தரைதளம் முற்றிலும் இடிந்து தரைமட்டம் ஆனது.

,இதுபற்றிய விவரம் வருமாறு;

மேற்கு வங்கத்தில் உள்ளது பரூய்புர். இங்கு மம்தாவின் திரிணமுல் காங்கிரசின் முக்கிய தலைவரான துவிஜென் மேண்டலின் என்பவரின் வீடு உள்ளது. இந்த வீட்டில் இன்று ( செப்.11) எதிர்பாராத விதமாக பலத்த வெடிசத்தம் கேட்டது.

இந்த சம்பவத்தில் வீட்டின் தரைதளம் முற்றிலும் சேதம் அடைந்தது. அதிர்வில் அருகில் உள்ள பல கட்டடங்களும் சேதம் அடைந்தன.

வெடிசத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் திடீரென பீதி அடைந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ பகுதிக்குச் சென்று விசாரணையை தொடங்கினர்.

வெடிவிபத்துக்கான காரணத்தை அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். காஸ் சிலிண்டர் வெடித்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Source link