மோசடி புகாரால் சட்டமன்றத்துக்கு வரவில்லையா? திமுக எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்ட பதிவு – dmk ss sivasankar explanation the reason for not attending the assembly session

குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான எஸ்.எஸ். சிவசங்கர் , கடந்த திமுக ஆட்சியில் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். இதனையடுத்து ஆட்சி மாறிய பிறகு புதிய அரசான தவெகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசி வந்தார். அவருடைய பேச்சுக்கள் திமுகவினர் மத்தியில் மிகப்பெரிய அளவில் உத்வேகத்தை அளித்தது. இதனிடையில் சமீப காலமாக இவர் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பல விதமான கேள்விகளை எழுப்பியது.

எஸ்.எஸ். சிவசங்கர் விளக்கம்

இந்நிலையில் தன்னை சுற்றி வட்டமடித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சட்டமன்றத்துக்கு வராதது ஏன் என்பது குறித்து எஸ்.எஸ். சிவசங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் நிறைவடைந்தது.

சட்டமன்ற கூட்டத்தொடர்

இதனிடையில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பிரதான எதிர்க்கட்சி சார்பாக சில முன்னாள் அமைச்சர்கள் வலுவான வாதங்களை முன்வைத்தனர். உதயநிதி ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக கே.என். நேரு, தங்கம் தென்னரசு, ஓபிஎஸ், செந்தில் பாலாஜி, வசந்தம் கார்த்திகேயன், எ.வ. வேலு உள்ளிட்டோர் பேரவையில் ஆக்டிவாக செயல்பட்டனர். இந்த லிஸ்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரும் இடம்பெற்று இருந்தார்.

மோசடி புகார்

இந்நிலையில் சமீப காலமாக அவர் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. இதற்கிடையில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக எழுந்த மோசடி புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினார்கள். அவரின் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இப்படியான நிலையில் இந்த மோசடி புகார் மற்றும் தவெக அரசின் நடவடிக்கைக்கு பயந்து சட்டமன்ற கூட்டத்தொடரில் சிவசங்கர் பங்கேற்கவில்லை என தகவல்கள் பரவியது.

அப்போலோவில் சிகிச்சை பெற்று ஓய்வு

இந்நிலையில் இது தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றும் செய்தி வெளியிட்ட நிலையில், அதற்கு பதில் அளிக்கும் விதமாக எஸ்.எஸ். சிவசங்கரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதாவது சட்டமன்ற கூட்டத்தொடரில் நான் ஆப்செண்ட் ஆனதால் காட்டிய அக்கறைக்கும், அன்புக்கும் நன்றி. அப்போலோவில் நான் சிகிச்சை பெற்றதும், ஓய்வில் இருப்பதும் அனைவருக்கு தெரிந்த ஒன்றே. குரலும், நலமும் சரியானவுடன் சந்திக்கிறேன்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

இவ்வாறு தன்னுடைய பதிவில் எஸ்.எஸ். சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலமாக கைது உள்ளிட்ட நடவடிக்கைக்கு பயந்து அவர் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதை புறக்கணித்தார் என பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதோடு எஸ்.எஸ். சிவசங்கர் பதிவினை தொடர்ந்து அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டும். மீண்டும் அரசியல் களத்தில் அவர் ஆக்டிவாக செயல்பட வேண்டும் எனவும் திமுகவினர் வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.

திமுக MLA-கள் Vs வெங்கட்ராமன்! கோபப்பட்ட சபாநாயகர்!

சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக அடிக்கடி பத்திரிக்கையாளர்களை சந்தித்து வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தவெகவின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார். அதோடு அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து அவர் பேசியது மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது. இதனால் சமீப காலமாக இணைய திமுக ஆதரவாளர்களுக்கு பிடித்தமான ஒருவராக எஸ்.எஸ். சிவசங்கர் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link