சென்னை: தமிழக முதல்வர் விஜய்க்கு, நடிகர் அஜித் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் இளைஞர்களை விளையாட்டு துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்பு களை உருவாக்கும் வகையில், தமிழக அரசு எடுத்து வரும் முன்னெடுப்புகள், மிகுந்த பாராட்டுக்குரியவை.
தமிழகத்தில் பிரத்யேகமான, ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ எனப்படும், ‘கார், பைக் பந்தயங்கள் நடத்துவதற்கான நகரம்’ அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது, ‘மோட்டார் ஸ்போர்ட்சில்’ ஈடுபட்டு வரும் ஒருவராக இதற்கு வாழ்த்துகிறேன்.
தமிழக அரசின் ஒரு சிறிய முன்னெடுப்பு, இந்திய மோட்டார் ஸ்போர்ட்சுக்கு ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கும். முதல்வர் விஜயின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகள். தமிழக அரசின் அனைத்து விளையாட்டு தொடர்பான முன்னெடுப்புகளும், மாபெரும் வெற்றி பெறட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
