தமிழ்நாடு சட்டப்பேரவையில் மிசா சட்டத்தின் கீழ் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து விஜய் பேசிய சர்ச்சைப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செப்டம்பர் 12-ம் தேதி பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் ம.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது ஆ.ராசா பேசிய கருத்துகள் அரசியல் அரங்கில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், மாற்று கட்சியினர் மற்றும் குடும்பத்தினரைத் தரக்குறைவாக சாடியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட தோழமைக்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்
ஆ.ராசாவின் விளக்கம்
சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் அளித்து ஆ.ராசா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
“தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ – உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்.
என் வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை.
நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின்
‘அடையாளத்தை’ – உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில்
கேள்விக்குள்ளாக்கியதில்…— A RAJA (@dmk_raja) September 13, 2026
கனிமொழி எம்பி எக்ஸ் தள பதிவு
இந்தச் சர்ச்சை தீவிரமடைந்த சூழலில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் எந்தவித கூடுதல் விளக்கமுமின்றி பின்வரும் திருக்குறளைப் பதிவிட்டுள்ளார்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 13, 2026
