யார் இந்த சுதா தீனதயாளன்? திமுக.எம்.பி.கனிமொழி முன்னிலையில் சர்ச்சைப் பேச்சு- மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? – who is sudha deenadayalan?cm vijay’s controversial remarks will action be taken m.k. stalin

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், கலைஞர் அவர்களின் வாரிசான எம்பி கனிமொழி மேடையில் அமர்ந்திருந்தபோதே, திமுக நிர்வாகி ஒருவர் முதல்வர் குறித்து முற்றிலும் நாகரிகமற்ற முறையில் அவதூறாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்ற எதிர்ப்பார்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த அக்டோபர் 18 ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் நடைபெற்ற திமுக மகளிர் தொண்டரணி மற்றும் முப்பெரும் விழாவில் சென்னை மேயர் பிரியா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.இக்கூட்டத்தில் பேசிய திமுகவை சேர்ந்த பெண் ஒருவர்,முதலமைச்சர் விஜய் குறித்துத் தரம் தாழ்ந்த மற்றும் அவதூறான கருத்துகளை முன்வைத்து பேசியிருந்தார்.இவரின் பேச்சை மேடையில் இருந்த சென்னை மேயர் பிரியா மற்றும் திமுக எம்.எல்.ஏ சேகர்பாபு உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கேட்டுச் சிரித்து ரசித்துக் கொண்டிருந்தபோதிலும், மேடையில் இருந்த திமுக எம்பி கனிமொழி உடனடியாக கூட்டத்திலேயே கடிந்துக்கொண்டார்.

மேடையிலேயே கண்டித்த கனிமொழி

திமுகவின் மூத்த நிர்வாகியாகவும், மகளிர் அணியை வழிநடத்திச் செல்லக்கூடியவரும், அனைவரின் அன்பையும் மரியாதையையும் பெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாரிசுமான கனிமொழி,கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் பெண் நிர்வாகி மேடையில் பேசிய பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியிலும்,அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.இந்த நிலையில், முதல்வர் குறித்து பேசியது யார் அந்த பெண்மனி என்று பலரும் தேடத் தொடங்கினர்.

யார் இந்த சுதா தீனதயாளன் ?

இவர் திமுகவில் நீண்டகாலமாக மகளிர் அணி நிர்வாகியாக உள்ளார். தற்போது திமுக சார்ப்பில் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 95-வது வார்டு கவுன்சிலராக சுதா தீனதயாளன் செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் திமுகவின் மேடை பேச்சாளரா பல்வேறு பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

காவல் துறை நடவடிக்கை

இந்தச் சம்பவம் குறித்துத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி உதயகுமார்எழும்பூர் காவல் நிலையத்தில் புகார்அளித்தார். இதனைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில், சுதா தீனதயாளன் மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமைப்பாளர் ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் திங்கள்கிழமை (அக்டோபர் 19) காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சுதா தீனதயாளனுக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

திமுகவின் நற்பெயருக்குச் சவால்

தவெக அரசு பொறுப்பேற்றது முதல் திமுக நிர்வாகிகளின் பேச்சு அத்துமீறி உள்ளது. குறிப்பாக திமுகவில் இருக்க கூடிய சிவாஜி கிருஷ்ண மூர்த்தி முதல் ஆ.ராசா,சேகர்பாபு,ஆர்.எஸ். பாரதி, திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்,பரந்தாமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பொதுவெளியில் முதல்வர் விஜய் குறித்து ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசி வருகின்றனர். இதுபோன்ற பேச்சுகள் திமுகவினரை உற்சாகப்படுத்துமே தவிர, மக்கள் மத்தியில் முக சுளிப்பை ஏற்படுத்தி, வெறுப்புணர்வை ஏற்படுத்தும். இருப்பினும், கட்சித் தலைமை மற்றும் கனிமொழி போன்ற மூத்த தலைவர்கள் இதுபோன்று கண்டனம் தெரிவித்து நிலைமையைச் சமன் செய்ய முயன்றாலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நிர்வாகிகளின் இது போன்ற தொடர் வரம்பு மீறிய பேச்சுக்கள் திமுகவின் நற்பெயருக்குச் சம்மட்டி அடியாக விழுந்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இருப்பினும், தேர்தல் முடிவுகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு போன்ற காரணங்களால் திமுகவின் செல்வாக்கு இன்னமும் முற்றிலுமாகச் சரியவில்லை என்றாலும், இதுபோன்ற செயல்கள் கட்சிக்குத் தொடர் தலைவலியாகவே அமைந்துள்ளன. எனவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுபோன்ற விவகாரங்களில் மிகக் கடுமையான நடவடிக்கைகளையும், உரிய உத்தரவுகளையும் உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும் என்பதே திமுகவின் அடிமட்டத் தொண்டர்களின் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source link