ரவி மோகன் பிறந்தநாள் சிறப்பு: 'An Ordinary Man' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Summary

பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, படத்தின் முதல் பாடலான ‘Higher’ ப்ரொமோ பாடல் இன்று மாலை 5.05 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.

நடிகரும் இயக்குனருமான ரவி மோகன் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், அவர் இயக்கும் ‘An Ordinary Man’ திரைப்படத்தின் படக்குழுவினர் அவருக்குச் சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Ravi Mohan's Birthday

இதனை முன்னிட்டு, திரைப்படத்தின் சிறப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியீடு செய்து படக்குழுவினர் தங்களது அன்பைப் பகிர்ந்து கொண்டனர்.

யோகி பாபு கதாநாயகன்

முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணியைக் கொண்டு உருவாகும் இப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். ‘கோமாளி’ படப்பிடிப்பின் போதே யோகி பாபுவிடம், தான் இயக்கும் முதல் படத்தில் அவரையே கதாநாயகனாக்குவதாக ரவி மோகன் உறுதியளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மாலை வெளியாகிறது Higher ப்ரொமோ பாடல்

பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, படத்தின் முதல் பாடலான ‘Higher’ ப்ரொமோ பாடல் இன்று மாலை 5.05 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. கெனிஷா பிரான்சிஸ் இசையமைத்துள்ள இந்த ப்ரொமோ பாடல், ரசிகர்களுக்குப் பிறந்தநாள் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையுலகில் இயக்குநராகப் புதிய பயணத்தைத் தொடங்கும் ரவி மோகனுக்கு, ‘An Ordinary Man’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியளிக்கும் எனத் திரை வட்டாரங்கள் வாழ்த்தி வருகின்றன.

Source link